×

தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு; அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சை காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  



Tags : Tanjai Kaviri Delta District ,CD Cultivation Tomb , Tanjore, for the cultivation of curry, in the tomb, opening
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...