×

ரஷியாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து : 33 தொழிலாளர்கள் படுகாயம்

மாஸ்கோ : ரஷியாவின் 3வது மிகப்பெரிய நகரமான நோவோசிபிக்கில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள நோவோசிபிக் நகரில் எரிவாயு சேமிப்பு கிடங்கில் எரிவாயு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு டேங்க் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. அப்போது அங்கு இன்று இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

சுமார் 1000 மீட்டர் சுற்றளவில் நெருப்பு குழம்பு பரவியது. இதில் 33 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அந்நகர போலீசார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர். எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Russia , நோவோசிபிக்
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...