×

கோபா அமெரிக்கா கால்பந்து பொலிவியாவை வீழ்த்தியது பராகுவே

கோயானியா: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலியாவை வீழத்தியது. ஏ பிரிவில் நேற்று  நடந்த லீக் ஆட்டத்தில் பராகுவே-பொலிவியா அணிகள் மோதின. ஆட்டம்  முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், பராகுவே அணியால் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு பொலியாவின் தற்காப்பு  ஆட்டம் சிறப்பாக இருந்தது. கூடவே ஆட்டத்தின்  முதல் கோலை பொலிவியாதான் அடித்தது. அந்த அணிக்கு 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எர்வின் சாவேத்ரா கோலாக மாற்றினார்.

அதனால் முதல்பாதி முடிவில் பொலிவியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதேநேரத்தில் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய ஜயூம் குயெலார் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதனால் 2வது பாதியில்  பொலிவியா 10 வீரர்களுடன் ஆடும் நிலை ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி பொலியாவை பொளந்து கட்டியது பராகுவே. அந்த அணியின் அலேஜான்ரோ ரொமெரோ 62வது  நிமிடத்திலும், ஏஞ்சல் ரொமெரோ 65வது மற்றும் 80 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஆட்ட நேர முடிவில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலியாவை வீழ்த்தியது.

* அர்ஜென்டினா- சிலி டிரா
ரியோ டி ஜெனிரோவில் நடந்த மற்றொரு ஏ பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா - சிலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி அற்புதமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். 57வது நிமிடத்தில் சிலி அணியின் வர்காஸ் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. கோல் அடிக்கும் வகையில் மெஸ்ஸி கொடுத்த பல அருமையான பாஸ்களை சக அர்ஜென்டினா வீரர்கள் வீணடித்தனர். கடைசி வரை விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags : Copa America ,Bolivia ,Paraguay , Copa America football beats Bolivia Paraguay
× RELATED வடக்கு பொலிவியாவில் கொட்டித் தீர்த்த...