×

முதல் முறையாக பைடன்-புடின் இன்று சந்திப்பு

பிரசல்ஸ்: அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு இன்று ஜெனிவாவில் இன்று நடக்கிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பைடன் தனது முதல் வெளிநாடு பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார். பிரிட்டன் சென்ற அவர், அந்தாட்டு பிரதமரை போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசினார். தொடர்ந்து, ்அங்கு நடந்த  ஜி-7 மாநாடு பங்கேற்றார். இதில், உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கும் செயல்பாடு, கொரோனா வைரசை பரப்பியது, அண்டை நாடுகளுடான மோதல் உட்பட பல்வேறு பிரச்னைகளில் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, பிரசல்ஸ்சில் நடந்த நேட்டோ மாநாட்டில் பைடன் கலந்து கொண்டார். நேற்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஜெனிவாவில் இன்று முதல் முறையாக சந்தித்து பேசுகிறார். இருநாட்டு நல்லுறவு, அமெரிக்க அரசு அலுவலகங்கள் மீதான ரஷ்யாவின் சைபர் தாக்குதல், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை கொலை செய்ய நடந்த முயற்சி போன்றவை குறித்து இருவரும் பேசுகின்றனர். உலகளவில் நிலவும் முக்கிய பிரச்னைகள், சீனாவின் அத்துமீறல்கள் குறித்தும் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Biden ,Putin , Biden-Putin meeting for the first time today
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை