விமானத்துறை அமைச்சர் தகவல் ரூ.450 கோடியில் புதிதாக 28 கடல் விமான சேவை தடம்

புதுடெல்லி: `நாட்டில் கடல் விமான சேவை தொடங்கும் வகையில், விமான போக்குவரத்து அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போது பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங், ``பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் 28 கடல் விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. குஜராத், அசாம், தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் 14 நீர் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை, ரூ.450 கோடி செலவில் தயாராகி வருகிறது,’’ என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், ``உதான் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ், பயன்பாடு, சேவை இல்லாத விமான நிலையங்கள், குறைந்த விமான கட்டணம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், தேர்ந்தெடுத்த விமான நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி சலுகை அளிக்கின்றன்,’’ என்றார்.

Related Stories:

More
>