கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து நீர் திறப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் 17,000 ஏக்கர் பாசன பகுதிகளின் பாசனத்திற்கு 16ம் தேதி (இன்று) முதல் 31.10.2021 வரை வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>