55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி: வைகோ வேண்டுகோள்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரும்பாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலை வாய்ப்பை நம்பியே உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற முடியாது என்ற அறிவிப்பால், கணவன் மற்றும் குழந்தைகளை இழந்து வாடும் பெண்களும், வயதானவர்களும் வேலையில்லாமல் உணவுக்குக் கூட வழியின்றி தவித்து வருகின்றார்கள். ஆகவே, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>