ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் குடையோடு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. 

திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் உடுமலை, மடத்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குடையுடன் வரும் நபர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவிலான மதுபாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் திண்டுக்கல் புறநகர் பகுதியான ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கரையில் ஆதார் மற்றும் குடை கொண்டுவருவோருக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். 

Related Stories: