×

தொடர்ந்து குறையும் கொடிய வைரஸ் பரவல்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 70,421 பேர் பாதிப்பு..! 2,726 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 2,726 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:


* புதிதாக  60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்தது.

* புதிதாக 2,726 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,13,378  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டின் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



Tags : India ,Federal Department of Health , Continuing to decline, the virus, 70,421 people, was infected
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...