பாஜ ஆளும் மாநிலங்களில் முதலில் மூடட்டும் டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி:  டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்  என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ‘‘துரதிஷ்டவசமாக நாடு முழுவதும் மதுப்பழக்கம் பரவி விட்டது. தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு அல்ல. வயது வந்தவர்கள், இளைஞர்கள், ஒரு சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர். நான் மது அருந்துவது கிடையாது. எனவே மது அருந்துபவர்களை தீயவர்கள் என கூற முடியாது. மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகளை மூட முடியாது.

டாஸ்மாக் கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகும். உலகம் முழுவதும் என்ன நெறிமுறைகள் உள்ளது என்றால் மதுக்கடைகள் இருக்கும். ஆனால் மது அருந்தக் கூடாது என பிரசாரம் செய்கின்றனர். கல்வி புகட்டுகின்றனர். சிகரெட் குடிக்க கூடாது. புற்றுநோய் வரும் என பிரசாரம் செய்வதால் இப்பழக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதுபோல தமிழக அரசு மது அருந்த கூடாது. உடல் நலன் கெடும் என பெரும் தொகையை செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் கல்வி புகட்ட வேண்டும். முதலில் பாஜ ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூடட்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இடுபொருள் விலை குறைந்தால் தான் இறுதி பொருள் விலை குறையும்’’ என்றார்.

Related Stories:

>