உலக டெஸ்ட் சாம்பியனுக்கு 12 கோடி பரிசு, கோப்பை

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 12 கோடியுடன் கோப்பையும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடும் அணிக்கு 12 கோடி மற்றும் கோப்பை பரிசளிக்கப்படும் என்று ஐசிசி நேற்று அறிவித்தது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடி கிடைக்கும். இந்த தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற நிலையில், 3வது இடத்துக்கு 3.3 கோடி, 4வது இடத்துக்கு 2.5 கோடி, 5வது இடத்துக்கு 1.5 கோடியும், மற்ற 4 அணிகளுக்கு தலா 75 லட்சமும் வழங்கப்படும். சாம்பியனுக்கான கோப்பை... ஸ்டம்ப், கிரிக்கெட் பந்து மற்றும் உலக உருண்டை இணைந்த கதாயுதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>