39 மனைவிகள், 94 குழந்தைகள் உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் மறைவு

அய்சால்: உலகின் மிகப்பெரிய குடும்பஸ்தரான ஜியோனா சனா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜியோனா சனா. உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு, 39 மனைவிகளும், 94 குழந்தைகளும் உண்டு. 33 பேரக் குழந்தைகளுடன் ஒரு கொள்ளுப்பேரனும் உண்டு. 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டடத்தில் ஜியோனாவின் குடும்பம் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். உயர் அழுத்தம், நீரிழிவு பாதிப்புகளால் கடந்த 11ம் தேதியன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று உயிரிழந்தார். மிசோரம் மாநில முதல்வர் ஜோரம்தங்கா தனது இரங்கல் பதிவில், ‘ஜியோனாவின் பெரிய குடும்பம் காரணமாக, அவர் வாழ்ந்த பக்தங் கிராமம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும்விதமாக அமைந்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>