×

பீகார் மாநில நுரையீரல் நிபுணரின் மகனான எம்பிபிஎஸ் மாணவரிடம் மருத்துவ உதவிகேட்டு மோசடி: டுபாக்கூர் ராணுவ வீரர் கைவரிசை

பாட்னா: பீகாரில் நுரையீரல் நிபுணரின் மகனான எம்பிபிஎஸ் மாணவரிடம் மருத்துவ உதவிகேட்டு மோசடி செய்த டுபாக்கூர் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா பிஎம்சிஹெச் மருத்துவமனையின் நுரையீரல் துறை நிபுணர் டாக்டர் சுனில் குமார் அகர்வாலின் மகன் ஷோபித் குமார், நேபாளத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன் நேபாளில் இருந்து ஷோபித் குமார் பாட்னா வந்தார். கடந்த 11ம் தேதி ஷோபிக் குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை ஒரு ராணுவ வீரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மருத்துவ சிகிச்சைக்காக உதவிகேட்டு, தனது ஆதார் அட்டை எண் போன்ற ஆவணங்களை ஷோபிக் குமாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து ஷோபித்தை அந்த நபர் (ஆதாரில் உள்ள பெயர் சதீஸ்) அழைத்தார்.

அப்போது, ‘உங்களது யுபிஐ எண்ணை செல்போனில் பதிவு செய்யுங்கள்’ என்றார். அவரும், தனது யுபிஐ எண்ணை பதிவு செய்ததும், ஷோபிக் குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. ​20 ஆயிரம் தொகை கழிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், அந்த நபரை செல்போனில் அழைத்து, நடந்த விபரத்தை சொன்னார். உடனே அந்த நபர், ‘உங்களது செல்போன் மூலம் எனக்கு 100 ரூபாய் செலுத்துங்கள். நான் இரட்டிப்பு தொகையை அனுப்புகிறேன் ’ என்றான். உடனே ஷோபிக் குமாரும், 100 ரூபாயை தனது கணக்கில் இருந்து அனுப்பினார். எதிர்முனையில் பேசிய நபர், ஷோபிக் குமாருக்கு 200 ரூபாய் அனுப்பினார். அதனால், எதிர்முனையில் பேசியவர் மோசடி செய்யமாட்டார் என்று நம்பினார்.

சிறிது நேரம் கழித்து அந்த நபர் ஷோபிக் குமாரை அழைத்து, ரூ .39 ஆயிரத்து 999 அனுப்பும்படி கேட்டார். அவரது வார்த்தையை நம்பிய ஷோபிக் குமார், தனது வங்கிக் கணக்கில் இருந்து செல்போன் மூலம் ரூ .39,999-ஐ அனுப்பினார். இதன்பின்னர், அனுப்பிய பணத்திற்கு இரட்டிப்பு பணம் வரும் என்று எதிர்பார்த்த ஷோபித் குமாருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. காரணம், அந்த நபர் தனது செல்போனை அணைத்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ள நிலையில், பீர்பஹோர் இன்ஸ்பெக்டர் ரிஸ்வான் அகமது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : MBBS ,Bihar ,Dubakkur , MBBS student, son of Bihar state lung specialist gets medical help scam: Dubakkur soldier handcuffed
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!