×

அதிமுக ஆட்சியில் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!: அமைச்சர் மா.சுப்ரமணியன்..!!

சென்னை: அதிமுக ஆட்சியின் போது பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் 4 கோடி ரூபாய் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மா.சுப்ரமணியன், 2008ம் ஆண்டு முதல் நடமாடும் மருத்துவமனைகளில் 200 ஊர்தி ஓட்டுநர்கள் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் பார்த்தசாரதி உள்ளிட்ட மூன்று பேர் சுமார் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது குறித்த புகார் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 


இந்த புகார் குறித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.



Tags : Minister ,Ma. Subramanian , AIADMK regime, ambulance driving, fraud, Minister Ma. Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...