ஊரடங்கை பயன்படுத்தி திருவில்லி.யில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர் : கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி திருவில்லிபுத்தூரில் பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.திருவில்லிபுத்தூர் நகரில் சர்ச் பாயிண்ட் அருகே சாலை பழுதாக இருந்ததால், அந்த இடத்தில் புதிதாக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது சர்ச் பாயிண்ட் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பரபரப்பான சாலையாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், இதனைப் பயன்படுத்தி புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில தினங்களாக பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் திருவில்லிபுத்தூர் ஆத்து கடை தெரு பகுதியிலும் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பஸ்கள் இயக்கப்படாத இந்த நேரத்தில் புதிய பால வேலைகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories:

>