×

நாகையில் 575 கி.மீட்டருக்கு சிறப்பு தூர்வாரும் பணி பணியில் தரமில்லை என்றால் மீண்டும் தூர்வார உத்தரவு-சிறப்பு அதிகாரி சிவதாஸ்மீனா தகவல்

நாகை : நாகை மாவட்டத்தில் 575 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த தூர் தூர்வாரும் பணியை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நேற்று நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் காவிரி, வெண்ணாறு கோட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். திருமருகல் அருகே சியாத்தமங்கை பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். உடன் கலெக்டர் பிரவீன்பிநாயர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது வாய்க்காலின் முகப்பு பகுதி மட்டும் தூர்வாரப்பட்டுள்ளது. அதன்பின்னர் சரியான முறையில் தூர்வாரப்படவில்லை.

சரியான முறையில் தூர்வாரினால் தான் தண்ணீர் கடைமடை வரை செல்லும். எனவே மீண்டும் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். இதன்பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்காக தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். தூர்வாரும் பணியில் தரம் இல்லை என்றால் மீண்டும் தூர்வார வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். நாகை மாவட்டத்தில் 575 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி எடுக்கப்பட்டு இதுவரை 399 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இது 69 சதவீத பணி நிறைவு பெற்றுள்ளது.எஞ்சியுள்ள பணிகள் வரும் 16ம் தேதிக்குள் நிறைவு பெறும். சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் கடந்த முறை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் தற்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும்.
இந்த தூர் வாரும் பணி முழுவதும் மனித சக்தியை கொண்டு செயல்படுத்தப்படவுள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படும். தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெறாமல் இருக்க பொதுப்பணித்துறை, விவசாயிகள் என 5 பேர் கொண்ட விவசாய குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே தூர்வாரும் பணியில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

Tags : Nagal ,Shivdasmena , Nagai: Special dredging work is underway for a distance of 575 km in Nagai district. District to oversee this far-reaching task
× RELATED திண்டுக்கல்லில் அன்னதானம் வழங்கல்