×

திருச்சி மாநகராட்சி, 3 நகராட்சி, 17 டவுன் பஞ்சாயத்துகளில் மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

திருச்சி : திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் 66,200 குடியிருப்புகளில் 2,46,600 மக்கள் வசித்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட வீடுகளில் உருவாகும் 116 டன் குப்பைகள் 57 வண்டிகள் மற்றும் 180 தள்ளுவண்டிகள் வாயிலாக சேகரிக்கப்பட்டு 9 நுண்ணுயிர் கூடங்களில் உரமாக்கப்பட்டு வருகிறது. வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வார நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார்.

இதையடுத்து, வார்டு எண்.53, 60 ஆகிய வார்டுகளில் மெகா கூட்டு சிறப்பு துப்புரவுப்பணி நடைபெற்றுவருகிறது. வார்டு எண்.53க்குட்பட்ட கொடாப்பு, வ.உ.சி தெரு பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணி, மழைநீர்வடிகால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் நேரு நேரடி களஆய்வு செய்தபோது கொடாப்பு குளத்தை தூர்வாரி அதனைச் சுற்றிலும் நடைபாதை அமைக்குமாறும், வ.உ.சி தெருவில் சாலையினை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள 305 கி.மீ மழைநீர் வடிகால்களை, மழைக்காலம் தொடங்க இருப்பதால் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சுத்தம் செய்யுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட மொத்தம் உள்ள 305 கி.மீ நீள மழைநீர் வடிகாலில் சுமார் 112 கி.மீ அளவிற்கு மழைநீர் வடிகால் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட மண்கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். மீதமுள்ள 193கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்குமாறு அமைச்சர் நேரு மாநகராட்சி ஆணையரை அறிவுறுத்தினார்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகள், திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர், மணப்பாறை, துவாக்குடி நகராட்சிகள், மண்ணச்சநல்லூர், லால்குடி, ச.கண்ணனூர், முசிறி, தொட்டியம், புள்ளம்பாடி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், மருங்காபுரி, பூவாலூர், தாத்தையங்கார்பேட்டை, சிறுகமணி, உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி, மேட்டுப்பாளையம், கூத்தைப்பார் மற்றும் பொன்னம்பட்டி பேரூராட்சிகளுக்குட்பட்ட ஆகிய அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலமோ அல்லது கூடுதல் பணியாளர்கள் மூலமோ மழைநீர் வடிகால்களை தூர்வாரி பின் மண் அகற்ற உடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை வீடுகளுக்கு வந்து குப்பைகளை பெற்றுக் கொள்ளும் வாகனங்களில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கிடவும், பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் குப்பைக் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனவும் அமைச்சர் நேரு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மாமியார் உடைத்தால் மண் குடம்,மருமகள் உடைத்தால் பொன் குடமா?பாஜகவுக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

திருச்சி மாவட்டத்தில் 8.7 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு 2ம் தவணையாக கொரோனா நிவாரண உதவி ரூ.2,000 மற்றும் மளிகை பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவக்கி வைத்த தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி மாவட்டத்துக்கு கோவாக்சின் தடுப்பூசி 15 ஆயிரம் வந்துள்ளது. முதல் தவணை போட்டுக் கொண்டு காத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

டாஸ்மாக் திறக்கக்கூடாது என போராடும் பாஜக, தாங்கள் ஆட்சி ஆளப்போகும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்தால் சரி, நாங்கள் செய்தால் தவறா? மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடைகள் திறந்திருக்கிறாங்க. அதை எதிர்த்து ஏன் போராடுவதில்லை. மதுஅருந்துபவர்கள் தவறான முறையில் செல்வதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.

நகர்ப்புற நிதிநிலை உயர்த்த ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொடருக்கு பின் கவனம் செலுத்துவோம்’ என்றார்.ஆணையுடன் வருவேன்: எம்பி திருநாவுக்கரசர்: நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்பி திருநாவுக்கரசர் கூறுகையில், ‘ராணுவத்துக்கு சொந்தமான இடம் கிடைக்காமல் பல ஆண்டாக பாதியில் பணி முடியாமல் நிற்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ளேன். போலீஸ் பட்டாலியனுக்கு சொந்தமான இடத்தை மாற்றாக கொடுத்து விட்டு ராணுவ இடத்தை எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதற்கான பைல் சென்னையிலிருந்து பூனே சென்று டெல்லிக்கு வரவேண்டும். இரண்டு நாள் கழித்து டில்லி சென்று ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளேன். இந்த முறை அரசு ஆணையுடன் வருவேன். விரைவில் பணி துவங்கும். விரைந்து பணிகள் முடிக்கப்படும்’ என்றார். இதுதொடர்பாக திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில், ‘அமைச்சர் கே.என்.நேரு மேம்பாலம் விஷயத்தை பாலோ செய்து வருகிறார். கொரோனா குறைந்ததும் ஜூலை மாதம் நானே டெல்லி செல்ல உள்ளேன்’ என்றார்.



Tags : Trichy Corporation ,Minister ,KN Nehru , Trichy: 2,46,600 people are living in 66,200 flats in 15 wards under Co. Abhishekpuram division of Trichy Corporation.
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...