முசிறி ,தொட்டியம் பகுதியில் பாசனத்திற்காக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மும்முரம்

முசிறி :முசிறி, தொட்டியம் தாலுகாவில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.முசிறி , தொட்டியம் தாலுகாவிலுள்ள வடகரை வாய்க்கால், காட்டு வாய்க்கால், காட்டுபுத்தூர் வாய்க்கால் ஆகியவை பாசன நிலங்களுக்கு மிகவும் பிரதானமாக விளங்குகிறது. இந்த வாய்க்கால்பாசன நீர் மூலம் பல ஆயிரக்கணக்கான பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.

இந்நிலையில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.பாசன வாய்க்கால்களை தூர்வாரவாருவதற்காக , பொக்லைன் இயந்திரம் ஆகியவை மூலம் வாய்க்காலில் உள்ள குப்பைகள், பட்டுப்போன மரத்துண்டுகள், தேங்கிக்கிடக்கும் மணல் முகடு அப்புறப்படுத்தப்பட்டு கடைமடை பகுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையிலான தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.சேதமடைந்துள்ள வாய்க்காலின் கரைகள் சீரமைக்கப்பட்டு தூர்வாரும் பணி துரித படுத்தப்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும்.

அதன் பின்னர் பொதுப்பணி துறை அலுவலர்கள் பகுதிவாரியாக பாசத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர்.பாசன வாய்க்காலை தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறைஉதவி செயற்பொறியாளர் வெங்கடேசன்,உதவி பொறியாளர் செங்கல்வராயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

Related Stories: