×

காங்.கில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்: கபில் சிபல் பேட்டி

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் செயலற்ற நிலையில் இல்லை என்பதை தௌிவுப்படுத்த, கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்,’’ என்று மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு ஆக்கபூர்வமான தலைமை இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர். இதனால், கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பல மாநிலங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கட்சி தாவி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாற்றங்கள் தேவை என அதிருப்தி மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், சோனியாவுக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவரான கபில் சிபில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வுக்கு எதிராக தற்போது வலுவான அரசியல் மாற்று இல்லை. தேர்தல் இழப்புகளை மறுஆய்வு செய்ய குழுக்களை அமைப்பது நல்லது என்றாலும், பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் செயல்படுத்தப்படாவிட்டால் எந்த பலனும் கிடைக்காது. கட்சி செயலற்ற நிலையில் இல்லை என்பதை காட்ட, கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். கட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்,’’ என்றார்.

Tags : Congress ,Kapil Sibal , Congress needs to reform: Kapil Sibal interview
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்