×

டெல்லியில் மால், ஓட்டல்கள் திறப்பு பேச்சை கேட்கலன்னா திரும்பவும் ஊரடங்கு: மக்களுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா 2வது அலை பாதிப்பு கடுமையாக இருந்ததால், கடந்த மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, அங்கு நிலையை கட்டுக்குள் வந்து இருப்பதால் முதல்வர் கெஜ்ரிவால் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறார். இந்த புதிய தளர்வுகளின்படி இன்று முதல் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், வாரச் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஓட்டல்களில் 50 சதவிகிதம் பேர் அமர்ந்து உண்ணலாம். கோயில்கள் திறக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதேநேரம், பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு அவர் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், ‘இந்த தளர்வுகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், நோய் அபாயம் ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்,’ என எச்சரித்துள்ளார்.

Tags : Kejriwal ,Delhi , Kejriwal warns people not to go to malls and hotels in Delhi
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...