ஆன்லைன் டேட்டிங் செய்து 10 பெண்களை ஏமாற்றிய கார்ப்பரேட் நிறுவன அதிகாரி

கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் வசிக்கும் 47 வயது பெண் தொழில் முனைவர் ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கணவரை பிரிந்து வாழும் தமக்கு ஆன்லைன் டேட்டிங் மூலம் சென்னை முகப்பேர் கிழக்கில் வசிக்கும் 49 வயது ஆனந்த் சர்மா நண்பராக அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறிய ஆனந்த் சர்மா பெண் தொழில் முனைவரை திருமணம் செய்ய முன்வந்ததால் இருவர் இடையே நெருக்கம் அதிகரித்தது.

கடந்த செப்டெம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ஆனந்த் சர்மாவை பெண் தொழில் முனைவர் சந்தித்துள்ளார். அப்போது தம்மை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதற்காக ஆனந்த் சர்மாவே கடிந்துகொண்ட போது 13 ஆண்டுகளாக தமது மனைவியுடன் தொடர்பு இல்லாததால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தவறு இளைத்துவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரினார். அது வெறும் நடிப்பு என்பது தமக்கு பின்னர் தான் தெரிய வந்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை போன்றே பிற பெண்களுடன் ஆனந்த் சர்மாவுக்கு இருந்த தொடர்பை அந்த பெண் அம்பலப்படுத்தியுள்ளார். பிசினஸ் விசிட் என்ற பெயரில் வெளியிடங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு வெவ்வேறு பெண்களுடன் ஆனந்த் சர்மா வளம் வந்தது தொடர்பான ஆவணங்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். அந்த பெண்களும் ஏதோ ஒரு வகையில் கணவரை பிரிந்து வாழ்வபர்கள் தான் என்றும் கோவை பெண் கூறியுள்ளார்.

ஆனந்த் சர்மாவின் மோசடி வலையில் வீழ்ந்த பெண்கள் யார்யார் என்ற விவரமும் போலீசுக்கு கிடைத்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து ஆனந்த் சர்மா அரங்கேற்றிய காதல் விளையாட்டுகள் குறித்து மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை பெண்ணின் புகாரை அடுத்து செயல் அதிகாரி பதவியில் இருந்து ஆனந்த் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை தீவிரமடைந்து இருப்பதால் ஆனந்த் சர்மாவுக்கு சிக்கல் மேலும் வலுத்துள்ளது.

Related Stories:

>