×

வேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை:  தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.  இந்த தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்வதற்கு முடிவுகள் வெளியானதில் இருந்து 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அவகாசம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூன் 15ம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்தவழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.



Tags : Candidates seeking to upload documents to the web site of the case: High Court hearing tomorrow
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...