டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஒருபுறம் மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு என பல காரணங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது. விலைவாசி உயர்வுக்கு தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப, பெட்ரோல் விலையையும், டீசல் விலையையும் லிட்டருக்கு தலா 5 மற்றும் 4 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

* மற்றொரு அறிக்கையில், தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும்.

Related Stories: