×

10 நாளில் விதிமீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு :  ஈரோடு மாநகர பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கினை மீறி செயல்படும் கடைகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகளை மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்து தலா ரூ. 5,000 அபராதம் விதித்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நான்கு மண்டலத்திலும் உள்ள கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை மாநகர் பகுதியில் தடையை மீறி செயல்பட்ட கடைகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள் என 230 கடைகளுக்கு தலா ரூ 5,000 அபராதம் விதித்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.11 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறும்போது, அரசின் விதிகளை பின்பற்றி முதல் முறையாக தவறு செய்பவர்களாக இருந்தால் 3 நாட்களுக்குள் அந்தக் கடை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் வணிக லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்….

The post 10 நாளில் விதிமீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Municipal Area ,Dinakaraan ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...