இயக்குநர் ஆயிஷா மீது தேச துரோக வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு!: லட்சத்தீவு பா.ஜ.க-வில் இருந்து 15 நிர்வாகிகள் விலகல்..!!

கவரத்தி: திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு போடப்பட்டதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.  லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் லட்சத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  புதிய விதிகளுக்கு எதிராக திரைப்பட இயக்குனரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா தெரிவித்த கருத்து விவாதத்திற்கு உள்ளானது. 

இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இதை கண்டித்து லட்சத்தீவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.  ஆயிஷா சுல்தானா மீது தவறான மற்றும் அநீதியான முறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதனிடையே லட்சத்தீவில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர், பாஜகவினர் மற்றும் அக்கட்சியோடு தொடர்புடையவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>