×

2 புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கு சலுகைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு இரு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ டிரேட் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் தினசரி குறைந்தபட்சம் 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை குறைந்தபட்சம் தலா 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணமில்லாமல் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவதோடு சிப்காட் மூலம் நிலம் ஒதுக்கி தரப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களுக்கு முத்திரை வரியில் 50% சலுகை வழங்குவதோடு, மின்சாரத்திற்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



Tags : TN Government , oxygen
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது