×

'டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும்'!: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!!

மதுரை: வருகின்ற 17ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலத்தை அடுத்த வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகின்ற 17ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றியடைய வேண்டும் என்று கூறியுள்ளார். 


பிரதமரை சந்திக்கும் போது தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவது குறித்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது 98 லட்சம் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன  என்பது மகிழ்ச்சியானது, வரவேற்கத்தக்க செய்தி என்றும் உதயகுமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மூன்று நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



Tags : BC ,Stalin ,Udayakumar , Delhi, Chief Minister MK Stalin, Travel, RP Udayakumar
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...