×

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொற்று குறைந்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 402 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 982 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு லட்சத்து 2631 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1556 பேர் உயிரிழந்துள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 621 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் இறந்தனர். 4566 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 325 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் இறந்தனர். 1931 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Tiruvallur ,Kanchi ,Chengalpattu , Decreasing corona infection in Tiruvallur, Kanchi and Chengalpattu districts
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு