×

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதில் 18க்கும் மேற்பட்ட வயதினருக்கும், 45க்கு மேற்பட்ட வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரேநாளில் 6,330 டோஸ்கள் போடப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டையில் 4 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடப்படுவதால் மக்கள் திரண்டனர். பின்னர் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வரிசையை ஒழுங்குபடுத்தினர். தற்போது 8,350 டோஸ் வந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தேவையான அளவு தடுப்பூசி வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மதுரையில் 16,500 டோஸ் கையிருப்பு உள்ள நிலையில் 90 மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்த 6,700 தடுப்பூசிகள் 26 முகாம்கள் மூலம் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஒருசில இடங்களில் டோக்கன் பெற்றவர்கள், இல்லாதவர்கள் ஒரேநேரத்தில் கூடியதால் காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.

திருத்துறைப்பூண்டிக்கு 5 நாட்களுக்கு பின்னர் 1000 டோஸ் தடுப்பூசி வந்தது. ஆனால் அங்குள்ள 5 முகாம்களிலும் 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட தாமதத்திற்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்னதாக காலை முதலே மையங்களில் மக்கள் திரண்டனர். ஆனால் தடுப்பூசி வராததால் டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் அதனை பெற முண்டி அடித்ததால் மக்கள் நல்வாழ்வுத்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.



Tags : Tamil Nadu , corona vaccine
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...