நெல்லையில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக-வினர் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

நெல்லை: நெல்லை அதிமுக ஒன்றிய செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில்  ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பன்னீர் செல்வதுடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாகவும் இதே நிலை நீடித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. 

இதனை தொடர்ந்து நெல்லை மாநகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் மாலூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் அனுமதியின்றி எதிர்ப்பு சுவரொட்டியை ஒட்டியதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

Related Stories:

>