×

ஆல்பா வகை கொரோனாவைவிட இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா 60% வேகத்தில் பரவுகிறது : பிரிட்டன் ஆய்வாளர்கள்

லண்டன் : ஆல்பா வகை கொரோனாவை விட டெல்டா வகை கொரோனா 60% விழுக்காடு வேகத்தில் பரவி வருவதாகவும் பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களில் 90% விழுக்காட்டினர் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 21ம் தேதி முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பிரிட்டனில் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29, 892 ஆக இருந்த நிலையில், ஒரு வாரத்தில் 42,323 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90% விழுக்காட்டினருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது 96% வரை அதிகரிக்கக் கூடும் என்றும் பிரிட்டன் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவைவிட இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா 60% வேகத்தில் பரவுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : India ,Britain , ஆல்பா வகை
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...