தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது!: பொதுமக்கள் ஆர்வம்..!!

குமரி: கொரோனா தடுப்பூசி செலுத்துவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால் கூட்டம் அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. சுசீந்திரத்தில் 250 பேருக்கு மட்டுமே இதற்கான டோக்கன் கொடுக்கப்பட்டது. டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் அல்லாமல் புதிதாக டோக்கன் வாங்குவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதேபோல் கரூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மாவட்டத்திற்கு 1700 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் 26 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். 

Related Stories: