×

ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்வு-குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வாய்ப்பு

குன்னூர் : குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ரேலியா அணையின் நீர்  மட்டம் உயர்ந்திருப்பதால் குடிநீர் தட்டுப்பாடி இன்றி கிடைக்க வாய்ப்பு  உள்ளது.டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின்  பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூர் பகுதியின் முக்கிய  குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் மே மாதங்களில் ரேலியா அணை வறண்டு போவதால் பொதுமக்கள் பணம்  கொடுத்து டேங்கர் லாரிகளிலும், கடைகளிலும் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படும். தற்பொது பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது 40  அடிக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு  ஏற்படாது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்வு-குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Relia dam ,Coonoor ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...