×

மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குல்பூஷனுக்கு உரிமை: பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம்

இஸ்லாமாபாத்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு உரிமையை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ல் இந்தியாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒன்றான பலுசிஸ்தானில் இந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2019ம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய இந்தியா, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க தடை பெற்றது.

தற்போது, கராச்சி நீதிமன்றத்தில் குல்பூஷன் அடைக்கப்பட்டு உள்ளார். மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை அவருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சர்வதேச நீதிமன்றம் வழங்கிய மறு ஆய்வு மற்றும் மறுபரிசீலனை உத்தரவை ஏற்று, குல்பூஷன் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. இது பற்றி பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நசீம் கூறுகையில், ``இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தால், இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலை அணுகி இருக்கும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்திருக்கும்,’’ என்றார்.

Tags : Kulbhushan , Kulbhushan has the right to appeal against the death penalty: pak. Resolution in Parliament
× RELATED குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு...