×

நடிகர் சார்லி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட நடிகர் சார்லி நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளேன். இதுவரை எனது பெயரில் எந்த சமூக வலைத்தளங்களிலும் கணக்கு தொடங்க வில்லை. இந்நிலையில் எனது புகைப்படத்துடன் டிவிட்டர் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் தவறான கருத்தோ மற்றும் மோசடியோ நடைபெற வில்லை. எனவே மோசடி ஏதேனும் நடைபெறுவதற்குள் எனது பெயரில் தொடங்கப்பட்டள்ள டிவிட்டர் கணக்கை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தாய் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அதில் இருந்து நான் இன்னும் மீளாத நிலையில் அதற்குள் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்வது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

Tags : Twitter ,Charlie ,Police Commissioner's Office , Fake Twitter account in the name of actor Charlie: Complaint to the Police Commissioner's Office
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...