×

அரசு அலுவலகங்கள், பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப்படம்: வைகோ வேண்டுகோள்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: குறள் ஓவியம் தந்த கலைஞர், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை நிறுவி, வள்ளுவத்தின் புகழை பார் அறியச் செய்தார். ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், திருவள்ளுவரின் உண்மை உருவத்தை படிப்படியாக மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்களின் அறைகளில் இருந்த, திருவள்ளுவரின் ஓவியம் காணாமல் போயிற்று. அரசு அச்சகத்திலும் புதிய படங்கள் அச்சிடுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. அதன்பிறகு,. திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசத் தொடங்கினர். காப்பு உரிமை பெறப்பட்ட, ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட, அரசு உடைமை ஆக்கப்பட்ட அந்த திருவள்ளுவர் ஓவியம், அண்ணா, கலைஞர் ஆட்சிக்காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல், மீண்டும் பொலிவு பெற வேண்டும். அனைத்து அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப் படம் இடம் பெறச் செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Vaiko , Thiruvalluvar portrait in government offices and buses: Vaiko request
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...