×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக, மத்திய அரசு கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்ட நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் மேலும் உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vale ,Vijayakanth , Petrol, diesel price hike hurts: Vijayakanth strongly condemns
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்