×

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு!!

கவரத்தி : லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த ஆயிஷா சுல்தானா மீது பிரிவினையை தூண்டக் கூடியதாக வழக்கு தொடரப்பட்டது. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக குஜராத் மாநில பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்று 5 மாதங்கள் ஆன நிலையில், லட்சத்தீவுகளில் இதுவரை இல்லாத வகையில் மது விற்பனைக்கு அனுமதி, மாட்டு இறைச்சிக்கு தடை போன்ற கடுமையான அடக்குமுறையை திணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் மீது நிகழ்த்தப்படும் சவால்களை ஏற்க முடியாது என்றும் பிரபுல் கோடா படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் லட்சத்தீவில் பிறந்த நடிகை ஆயிஷா சுல்தானா, மலையாளத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது கொரோனா பாதிப்பு இல்லாத லட்சத்தீவுகளில் தொற்று பரவ பிரபுல் கோடா படேல் காரணம் என்று விமர்சித்தார். லட்சத்தீவுகளை அழிக்க மத்திய அரசு அனுப்பி வைத்த உயிரி ஆயுதம் அவர் என்று ஆயிஷா சுல்தானா கடுமையாக சாடினார். இதனால் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவர் அப்துல் காதர் சுவரொட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா சுல்தானா மீது புகார் கொடுத்தார். புகாரில் தேசத்திற்கு விரோதமாக கருத்து தெரிவித்து மோடி அரசின் பெயரை கெடுக்க ஆயிஷா முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து ஆயிஷா சுல்தானா மீது பிரிவினை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றி முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆயிஷா, தமது கருத்துக்களை திரும்பப் பெற போவதில்லை என்று கூறி இருக்கிறார்.

Tags : Nation ,Aisha Sultana ,Lakdiv , லட்சத்தீவு
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...