தமிழக அரசின் மின்னல் வேக நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்துள்ளது : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பாராட்டு!!

மதுரை : தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்க அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கூடக்கோவிலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயக்குமார் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று 35,000த்தில் இருந்து 17,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்றார். தமிழக அரசின் மின்னல் வேகா செயல்பாட்டிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் ஆர்.பி.உதயக்குமார் குறிப்பிட்டார்.கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்று தான் மிகச் சிறந்த ஆயுதம் என்றும் அவர் கூறியுள்ளார்.முதல்வர் தெரிவித்ததை போல இதனை மக்கள் இயக்கமாக மாற்ற போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Stories:

>