×

யூ-டியூப்பை தெறிக்கவிட்ட ‘என்ஜாய் எஞ்சாமி’பாடல்!: 3 மாதங்களில் 25 கோடி பார்வையாளர்கள் கேட்டு ரசித்து சாதனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் வயது வித்யாசம் இன்றி பலரையும் முணுமுணுக்க வைத்த என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன ஆல்ப பாடல் யூடியூப் தளத்தில் 3 மாதங்களில் 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது. இந்த பாடல் வரிகளை சென்னையை சேர்ந்த ராப் பாடகர் அறிவு எழுதி இருந்தார். இவரும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ ஆகியோர் பாடி நடித்திருந்தனர். 


இந்த ஆல்ப பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.குமானின் மாஜா என்ற நிறுவனம் தயாரித்தது. இயற்கை வளத்தையும், இயற்கையின் அவசியத்தையும், கலாச்சாரத்தின் ஆணி வேரையும் போற்றும் இந்த பாடலுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது யூடியூப்-ல் 25 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்றுள்ளது.


என்ஜாய் எஞ்சாமி பாடல் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் வெளியான 2 வாரங்களில் 4 கோடி பேர் பாடலை ரசித்துள்ளனர். ஒரு திரைப்பட பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை விட பெருவாரியான வரவேற்பை இந்த பாடல் பெற்றுள்ளது. இந்த வரவேற்பை பார்த்து திரைத்துறையினர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். 


ஆங்கில ஆல்பம் பாடலுக்கு இணையாக இருப்பதால் இதனை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த பாடலை  பாடிய தீ, மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலை பாடி புகழ் பெற்றவராவார். 



Tags : YouTube , U-Tube, ‘Enjoy Enzami’ song, 25 crore viewers, record
× RELATED பெண்களின் ஆபாச வீடியோ பதிவேற்றிய யூடியூபர் கைது