அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் கடவுளின் தூதுவர்கள் : பாபா ராம்தேவ் புகழாரம்!!

டெஹ்ராடூன் : அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறையை முட்டாள்தனமான மருத்துவம் என்று கூறி சர்ச்சையில்சிக்கிய யோகா குரு ராம்தேவ் தற்போது யூடர்ன் அடித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் கடவுளின் தூதுவர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான ஒன்று என்றும் அது காலாவதியான அறிவியல் எனவும் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர் தான் பாபா ராம் தேவ்.

கொரோனா தொற்றுக்கு அனைவரும் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்தார். தடுப்பூசி தமக்கு தேவை இல்லை என்றும் யோகா, ஆயுர்வேத மருந்து மட்டுமே போதும் என்றும் அவர் கூறி இருந்தார். இவரின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மன்னிப்பு கோராவிட்டால் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அந்த சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் தெய்வத்தின் தூதுவர்கள் என்று கூறியுள்ளார் அவர். அத்துடன் விரைவில் தாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாகவும் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

Related Stories:

>