×

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட ஆலோசனை கூட்டம்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து நேற்று ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே காவல் நிலைய போலீசார் மற்றும் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.

இதில்  ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ், காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் டேப்ராத் சட்பதி ஆகியோர் தலைமையில் ரயில்வே காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்து போலீசார் செயல்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது, சட்ட விரோதமாக  செயல்படும் நபர்கள் கண்டறிவது, ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணிப்பத்து உரிய நடவடிக்கை எடுப்பது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களில், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வருபவர்களையும், வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்துபவர்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வழக்குப்பதிவு செய்தல், கொரோனா  காலகட்டம் என்பதால் ரயில் பயணிகள் இடையே சமூக இடைவெளியை, முகக்கவசம் அணியாமல் பயணம் செய்யும் பயணிகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Tags : Jolarpet ,station , Jolarpet: A consultative meeting was held at Jolarpet railway station on the co-ordination of police security.
× RELATED ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில்...