×

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு அரசு வக்கீல்களாக 44 பேர் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்கு, 44 அரசு வக்கீல்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிடுள்ளது.  இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 அரசு வக்கீல்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வக்கீல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வக்கீல்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக ஏ.செல்வேந்திரன், ஆர்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகர், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுசாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமார், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், டி.ஜெயப்பிரகாஷ், வி.பி.ஆர்.இளம்பரிதி, யு.பரணிதரன், ேக.திப்புசுல்தான், கே.எம்.டி.முகிலன், எல்.எஸ்.எம்.ஹசன்பைசல், எஸ்.ஜெ.முகமது சாதிக், யோகேஷ் கண்ணதாசன்,

ஏ.இ.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்தர், ஸ்டாலின் அபிமன்யு, என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், எம்.ஆர்.கோகுலகிருஷ்ணன், பி.பாலதண்டாயுதம், டி.என்.சி.கௌசிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக வி.ஜெ.பிரியதர்ஷனா, ஆர்.வினோத்ராஜ், எஸ்.சுகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக, எம்.லிங்கதுரை, கே.எஸ்.செல்வகணேசன், பி.சரவணன், ஆர்.ராகவேந்திரன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சண்முகவேல், டி.காந்திராஜ், ஏ.பாஸ்கரன், பி.சுப்புராஜ், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக ஆர்.எம்.அன்புநிதி, டி.செந்தில்குமார், கே.சஞ்சய்காந்தி, ஆர்.எம்.எஸ்.சேதுராமன், பி.கோட்டைசாமி, இ.அன்டனி சகாய பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே 26 அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai High Court ,Madurai Branch , Chennai High Court, Madurai Branch has appointed 44 persons as Public Prosecutors: Government Publication
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...