×

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு : பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதம்: ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து லட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள்.   அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை.   எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும்.  தமிழ் ஈழம் என்ற நாட்டை  அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை,  இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Vaiko , Referendum to form Tamil Eelam: Vaiko's letter to the Prime Minister
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...