×

மத்திய பிரதேச மாஜி முதல்வர் கமல்நாத்துக்கு திடீர் காய்ச்சல்: டெல்லி மருத்துவமனையில் அட்மிட்

போபால்: திடீர் காய்ச்சல் அறிகுறியால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், டெல்லியின் குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கமல்நாத்தின் குடும்ப வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக டெல்லியில் இருந்த கமல்நாத்திற்கு, திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்தது. அதனால், மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, கொரோனா வைரசின் அறிகுறிகள் காணப்பட்டன. மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா வெளியிட்ட  அறிக்கைகையில், ‘முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக  காய்ச்சல் இருந்தது. அதனால், வழக்கமான பரிசோதனைக்காக மேதாந்தா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘ஹனிட்ராப்’ வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி, கமல்நாத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அவரை கடந்த 2ம் தேதி போபாலில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் போபாலில் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கிடையே, டெல்லி மருத்துவமனையில் கமல்நாத் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Former ,Madhya ,Pradesh ,Chief Minister ,Kamal Nath ,Delhi , Former Madhya Pradesh Chief Minister Kamal Nath has a sudden fever: Admitted to a Delhi hospital
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?