×

ஸ்டெர்லைட் ஆலையில் 10.50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணி துவங்கியது. கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று (9ம் தேதி) மாலை 6 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதில், 6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மெட்ரிக் டன் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : The Sterlite plant produces 10.50 metric tons of oxygen
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்