நேற்று ஓ.பி.எஸ்...இன்று ஈ.பி.எஸ்!: நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக-வினர் போஸ்டர்..!!

நெல்லை: நெல்லையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அதிமுக-வினர் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிகளில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பன்னீர் செல்வத்துடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகள் எடுக்காததால் தான் தேர்தலில் தோற்றதாகவும், இதேநிலை நீடித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது நெல்லை மாநகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையிலான போஸ்டர் யுத்தம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>