×

'அ.தி.மு.க-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது'!: புதிய ஆடியோ வெளியிட்ட சசிகலா... அரசியல் கட்சியினர் பரபரப்பு..!!

சென்னை: அதிமுக-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று தாம் வெளியிட்டுள்ள புதிய ஆடியோ உரையாடலில் வி.கே.சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் தாம் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, தற்போது மீண்டும் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக அதிமுக தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வரும் அவர், அந்த ஆடியோ உரையாடலையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது தனது 23வது ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ள சசிகலா, அதில் காரைக்குடியை சேர்ந்த பாஸ்கரன் என்ற அதிமுக தொண்டருடன் பேசியுள்ளார். அதிமுக-வை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறும் சசிகலா, கட்சிக்காக தாம் நிறைய பாடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களின் மன குமுறலை அறிந்த பிறகே தாம் அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதிமுக-வில் சசிகலாவுக்கு இடமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக-வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : BC ,Sasikla , ADM, Life, Audio, Sasikala
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...