×

தமிழகத்துக்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகள் அனுப்பி வைக்காததால் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி கடந்த 3 நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, நெல்லை, சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கான தொகையை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கொடுத்த பிறகும் நேற்று வரை கூடுதல் ஊசிகள் வந்து சேரவில்லை. 


இந்த நிலையில், இன்று 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்தன. இவைகள் மாவட்டங்கள்தோறும் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து நேற்று வரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டன. இவற்றில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். 


கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். கரும்பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து 35,000 குப்பிகள் வழங்குமாறு கேட்டும் வெறும் 3,060 மட்டுமே கிடைத்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 1,052 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai , Tamil Nadu, 85,000 dose of covax vaccine, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...