×

கொரோனா பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இக்கூட்டமானது காணொலிக்காட்சி மூலம் இன்று மதியம் நடந்தது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வரும் 24ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்காங்கு தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியில் வருவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர் மட்டுமே வெளியில் வருகின்றனர். இதேநிலையே மாநிலம் முழுவதும் தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று குறைந்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. திருமண மண்டபங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சென்னை, தலைமை செயலகத்தில் இக்கூட்டம் இன்று மதியம் சுமார் 12 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் மாவட்டங்களில் கொரோனாவை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் புதிதாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post கொரோனா பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Vaiyanbu ,Dinakaran ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை